கொன்றை வேந்தன் பாடல் | இரண்டாம் வகுப்பு – தமிழ் | RR International School CBSE
கொன்றை வேந்தன் ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். கொன்றை மரத்தின் மலரை விரும்பி அணியும் கடவுள் சிவன். அவரது புதல்வர்களுள் ஒருவாகிய முருகனை போற்றி இந்நூல் பாடப்பட்டுள்ளது. இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடல்: “கொன்றை வேந்தன் செல்வன் அடிஇணை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே” இதில் குறிப்பிடப்படும் “கொன்றை வேந்தன் செல்வன்” கொன்றைமாலை அணிந்த சிவன் என்னும் கடவுளின் மகனாகிய விநாயகர். இப்பாவின் முதலிரு சொற்களே இந்நூலின் பெயராகின. இதில் மொத்தம் 91 பாக்கள் உள்ளன.